Font size:
Print
தமிழக அரசின் புதிய முயற்சியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க மின்னணு பெட்டகம் வழங்கப்பட்டு, எலக்ட்ரானிக்ஸ் துறையில் அவர்களது ஆர்வத்தை தூண்டும் புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இந்த மின்னணு பெட்டகத்தில் 300-க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் அனைத்து வசதிகளும் உள்ளன. இதன் மூலம் மாணவர்கள் தாங்களாகவே பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உருவாக்கி பரிசோதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் ஒரு மணி நேரம் இதற்காக ஒதுக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை எலக்ட்ரானிக் துறையில் அமைத்துக்கொள்ளும் வகையில் தயாராகுவார்கள்.
மாணவி கிருசாந்தியின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் | Thedipaar News
Related Posts