விஜய்யின் கோட் படத்தை பார்க்க வந்த அவரது ரீல் தங்கை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜய்யின் கோட் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. என்னதான் படம் பார்க்க போர் அடித்தாலும் கூட விஜய் நடித்துள்ளார் என்பதற்காகவே ரசிகர்கள் படத்தை ஹிட்டாக செய்து விடுகிறார்கள். அதுவும் விஜய் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம், காரணம் அடுத்து இவர் அரசியலில் முழு நேரமாக இறங்கி பணியாற்ற போகிறார் என்பதால் கண்டிப்பாக விஜய்யை சினிமாவில் பார்ப்பது அரிதாகி விடும். அதனாலே இவரது ரசிகர்கள் இந்த கோட் படத்தை வெறித்தனமாக சோசியல் மீடியாவில் ப்ரொமோட் செய்து ஹிட் அடிக்க வைத்து விடுகிறார்கள் விஜயின் கெரியரில் மிகப்பெரிய ஹிட் ஆன படங்களில் ஒன்று துப்பாக்கி. 

இதில் விஜய்யின் இரண்டு தங்கைகளில் ஒருவராக நடித்து இருந்தவர் தீப்தி நம்பியார். அவர் தமிழில் மேலும் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். இருப்பினும் பெரிய அளவில் அவரால் ஜொலிக்க முடியவில்லை.தற்போது தீப்தி விஜய்யின் GOAT பார்க்க வந்திருக்கிறார். அவர் படம் பார்த்துவிட்டு கொடுத்த பேட்டி வைரல் ஆகி வருகிறது. தற்போது அவர் ஆளே மாறி, அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டாரே என நெட்டிசன்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.

இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி | Thedipaar News

Related Posts