நடிகை பிரணிதா தமிழில் சகுனி, மாஸ், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் போன்ற படங்களில் நடித்து இருப்பவர். தெலுங்கு, மலையாள சினிமாவில் ஓரளவு படம் நடித்துள்ளார். என்னதான் தென்னிந்திய மொழிகளில் நடித்திருந்தாலும் கூட இவருக்கு எந்த மொழியிலும் பெரிதாக ஹிட் கொடுத்த படங்கள் இல்லை. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு என்று எப்போதும் ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. இவருக்கு திருமணம் ஆகி ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறது. மேலும் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அதற்கு ரசிகர்கள் வாழ்த்தும் கூறி வந்தார்கள். முன்னொரு காலத்தில் நடிகைகள் விரைவாக திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். அப்படி திருமணம் செய்தாலும் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டார்கள் காரணம் வாய்ப்புகள் குறைந்துவிடும்.
ஆனால் இப்போதுள்ள நடிகைகள் சினிமாவில் நன்றாக வளரும் போதே சரியான துணையை சரியான வயதில் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதோடு இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளை சரியான வயதில் பெற்றும் கொள்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது பிரணிதாவுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது.குழந்தை உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு பிரணிதா அதை மகிழ்ச்சியாக அறிவித்து இருக்கிறார்.
மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில் | Thedipaar News