ரீல்ஸில் திறமை காட்டுங்க! ஆயிர கணக்கில் பரிசுகளை வெல்லுங்க!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தென்காசி மாவட்டத்தில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான சுற்றுலா விழிப்புணர்வு போட்டி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு சுற்றுலா மற்றும் அமைதி என்ற கருப்பொருளில் 30 முதல் 90 வினாடிகள் கொண்ட இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்கி அனுப்பும் மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம். இந்த போட்டி மூலம் மாணவர்கள் சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ளலாம். மேலும், தங்கள் கலை மற்றும் திறமைகளை வெளிப்படுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் வீடியோக்களை செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

Related Posts