டிவி ஷோவில் நடந்த அநியாயம்! கொதித்தெழுந்த சோசியல் மீடியா பிரபலங்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

குக் வித் கோமாளி ஷோவில் இருந்து மணிமேகலை விலகுவதாக அறிவித்து இருக்கிறார். போட்டியாளராக வந்திருக்கும் VJ பிரியங்கா தலையீடு அதிகமாக இருக்கிறது. புகார் அளித்தால் என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். சுயமரியாதை முக்கியம் என விலகி விட்டேன் என மணிமேகலை கூறி இருக்கிறார். பிரியங்கா பல காலமாக விஜய் டிவியில் இருப்பதால் அவருக்கு விஜய்டிவியில் செல்வாக்கு அதிகம். அதுமட்டுமா? இப்போது விஜய் டிவியில் இருக்கும் எல்லா ஷோக்களையும் தொகுத்து வழங்குவது பிரியங்காவாக மட்டும் தான் இருக்கமுடியும். மிகவும் அரிதாக தான் மற்ற பெண் தொகுப்பாளர்களை பார்க்கமுடியும். டிடி, ரம்யா போன்ற திறமை வாய்ந்த தொகுப்பாளினிகளை இப்போது பார்க்க முடிவதில்லை. காரணம் விஜய் டிவியில் நடக்கும் ஷோக்களுக்கு இப்போது காமெடி சென்ஸ் உள்ள தொகுப்பாளினிகள் தேவைப்படுகிறாரகள். அதனாலே அதிக காமெடி சென்ஸ் உள்ள பிரியங்கா எல்லா ஷோக்களிலும் உள்ளார். 

ஆனால் திறமை மீது அதிக நம்பிக்கை வந்துவிட்டால் அதுவே தலைக்கணத்தை உருவாக்கும் என்பதற்கு பிரியங்காவே உதாரணம். இப்போது நடந்து கொண்டிருக்கும் குக் வித் கோமாளி ஷோவில் மணிமேகலை தொகுப்பாளினியாக இருக்கும் போது, பிரியங்கா போட்டியாளராக உள்ளார். போட்டியாளராக மட்டும் அல்லாது அவர் அடிக்கடி மணிமேகலை வேலையிலும் குறுக்கிட்டு கொண்டிருப்பது ஷோவை பார்க்கும்போது தெரியும். இதனாலே மணிமேகலை மேல் இடத்தில் புகார் சொல்லியும் அவர்கள் பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்க சொல்வதால் மணிமேகலை ஷோவை விட்டு வெளியேறி விட்டார். இப்போது சோசியல் மீடியாவில் மணிமேகலைக்கு ஆதரவும் பிரியங்காவிற்கு எதிர்ப்பும் கிளம்பிவரும் நிலையில் பல பிரபலங்கள் மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில் இது தான் கர்மா என அனிதா சம்பத் பதிவிட்டுள்ளார்.யார் அடுத்தவரை கீழே போட்டு மிதிக்க நினைக்கிறாரோ, அவர் அதே போன்ற இன்னொருவரால் செருப்படி வாங்குவார் என அனிதா சம்பத் கூறி இருக்கிறார்.தான் பாதிக்கப்பட்டு இருப்பதை தான் அனிதா சம்பத் இப்படி கூறி இருக்கிறார். ஆனால் அவர் பிரியங்காவை தாக்குகிறாரா அல்லது மணிமேகலையை சொல்கிறாரா என வெளிப்படையாக சொல்லவில்லை. அதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.மேலும் மணிமேகலை ஷோவில் இருந்து விலகுவதாக நேற்று போட்ட பதிவில், Guts all the best mani என அனிதா சம்பத் கமெண்ட் செய்திருந்ததை பார்க்கும்போது, பிரியங்காவை தான் தாக்குகிறார் என்பது தெரியவந்தது.

Related Posts