முன்னாள் மனைவி மீது தனுஷிற்கு மீண்டும் காதல் துளிர்விடும் போன்றே? பிரபலத்தின் வாரிசு என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தாலும் நிறைய கஷ்டப்பட்டு முன்னே வந்தவர் நடிகர் தனுஷ். கடின உழைப்பு போட்டு உயர்ந்திருக்கிறார்.நடிகர் என்பதை தாண்டி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமையை காட்டி வருகிறார். ரஜினி மருமகன் என்ற அடையாளம் ஏற்படும் முன்னரே திறமையான முன்னணி நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றுவிட்டார். சமீபத்தில் தனுஷின் 50வது படமான ராயன் படம் வெளியானது, அவரே இயக்கி, நடித்தும் இருந்தார். நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவை 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஆனால் இருவரும் சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்து அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் ஓணம் ஸ்பெஷலாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அழகான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட அதற்கு நடிகர் தனுஷ் லைக்ஸ் போட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் தனுஷ் லைக்ஸ் போட்டுள்ளார் என புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள். தனுஷை பிரியும் முன்னர் ஐஸ்வர்யா சோசியல் மீடியாவில் இந்த அளவிற்கு போஸ்ட்களை போட்டதில்லை, இப்போது தன்னுடைய முன்னாள் கணவர் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தன்னை பற்றிய அப்டேட்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.
பாடகிக்கு அரிதான பரிசு கொடுத்த வைரமுத்து | Thedipaar News