கமலால் பறிபோன வாய்ப்பு! கமலுடன் நடிக்கவில்லை என்றால் வாய்ப்பு மறுப்பா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்திய நடிகர், திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் கமல் ஹாசன். இந்தமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்க போவதில்லை. விஜய் சேதுபதியே இந்த முறை பிக்பாசை தொகுத்து வழங்க போவதால் ஷோ கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. கமல் சினிமாவிலும் அரசியலிலும் மட்டுமே கவனம் செலுத்துவதால் இது போன்ற நிகழ்ச்சிகளை முற்றிலும் தவிர்த்து வருகிறார். கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான படம் இந்தியன் 2 எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறாமல் இந்த படம் படுதோல்வி அடைந்து கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது. 

இந்தியன் 2 படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார் கமல் ஹாசன். இந்த முறை கமல்ஹாசனுக்கு எல்லாமே இறங்கு முகமாக இருப்பதால் இந்த படமாவது நன்றாக வருமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளாராம். இந்த நிலையில், கமல் ஹாசன் குறித்து ராதிகா ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். ராதிகா பேசுகையில், கமல் ஹாசன் படம் என்றாலே கண்டிப்பாக அதில் கதாநாயகியுடன் நெருங்கி பழகும் காட்சிகள் சில இருக்கும். இதன் காரணமாக சில நடிகைகள் பயந்துகொண்டு கமலஹாசனுடன் நடிக்க மறுத்துள்ளனர். 

அந்த வகையில், நானும் அதுபோல் நடிக்க மறுத்தேன் அதற்காக எனக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது என்று கூறியுள்ளார். தற்போது, அவர் கூறிய இந்த விஷயம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. அப்படியானால் கமல் பல நடிகைகளை வற்புறுத்தி தான் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் தன்படத்தில் நடிக்காத பட்சத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்குமோ என சந்தேகிக்கிறது சோசியம் மீடியா.

Related Posts