கனடாவில் அறிமுகமாகும் புதிய தடுப்பூசி: வெளியான தகவல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கோவிட் 19 தொற்றுக்காக பயன்படுத்தப்படும்  நோவா வாக்ஸ் தடுப்பூசிக்கு கனடிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசியானது புரோட்டினை அடிப்படை ஆகக் கொண்டது. 

இந்த தடுப்பூசியானது ஒமிக்ரோன் திரிபின் உப திரிபுகளை கட்டுப்படுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய கோவிட் தடுப்பூசிகளை பயன்படுத்த வேண்டாம் கனடிய சுகாதாரத் திணைக்களம் கோரியுள்ளது. அதற்கு பதிலீடாக புதிய தடுப்பூசிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

 ஏற்கனவே கடந்த வாரம் முதல் மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் குளிர்காலத்தில் புதிய கோவிட் தொற்று பரவக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகிறது. 

இதனால் புதிய தடுப்பூசிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts