பிக்பாஸில் உறுதி செய்யப்பட்ட பிரபலத்தின் மகன்! வெளியானது அதிரடி லிஸ்ட்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிக் பாஸ் 8ம் சீசன் தமிழில் இன்னும் ஒரே வாரத்தில் தொடங்க இருக்கிறது. விஜய் சேதுபதி தான் இந்த முறை தொகுப்பாளர் என்பதால் எதிர்பார்ப்பும் அதிகம் இருக்கிறது. மேலும் போட்டியாளர்களாக வரும் பிரபலங்களும் இறுதி செய்யப்பட்டு இருக்கின்றனர். அக்டோபர் 6ம் தேதி பிக் பாஸ் 8 பிரம்மாண்ட தொடக்க விழா உடன் ஆரம்பிக்க இருக்கிறது. பல பிரபலங்களின் பெயர் இந்த பிக்பாஸ் லிஸ்டில் உள்ளது. முக்கியமாக சண்டை போட்டு அடித்துக்கொள்ளும் விதமாக பல யூடியூப் பிரபலங்களின் முகத்தை இந்த முறை பிக்பாஸில் பார்க்கலாம். இந்நிலையில் பிக் பாஸ் 8 போட்டியாளராக மறைந்த காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு வரப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மயில்சாமிக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கும் நிலையில், அன்பு மயில்சாமிக்கு அவர்கள் மூலமாக அதிகம் ஆதரவு பிக் பாஸ் வாக்கெடுப்பில் கிடைக்கலாம் என இப்போதே நெட்டிசன்கள் பேச தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இதற்கு முன் பிக் பாஸில் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து விஜய் டிவி ஒரு புது விஷயத்தை செய்ய இருக்கிறது. முன்னாள் போட்டியாளர்கள் ஒருபக்கம், மக்கள் இன்னொரு பக்கம் என அமரவைத்து அவர்களுக்கு நடுவில் விவாதம் ஒன்றை நடத்த இருக்கிறது. தொடக்க நிகழ்ச்சியில் அந்த பகுதியும் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

Related Posts