56 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான ராணுவ விமானத்தில் இருந்து 4 உடல்கள் மீட்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இமாச்சலப் பிரதேச மலைப் பகுதிகளில் 56 வருடங்களுக்கு முன்பு ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியான 4 பேரின் உடல்கள் தற்போது ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 7, 1968-இல் சண்டிகரிலிருந்து லே லடாக்குக்கு இந்திய ராணுவத்தின் ஏஎன்-12 வகை விமானம் பயணித்தது. அப்போது அதில் மொத்தம் 102 பேர் பயணித்தனர். ஆனால், இந்த விமானம் ரோத்தங் பாஸ் பகுதியில் விபத்துக்குள்ளானது. 

விமானத்தில் இருந்த 102 பயணிகளும் காணாமல் போயினர். இந்த விபத்தில் பலியானதாக கருதப்பட்ட பலரது உடல்களும் உடனடியாக மீட்கப்படவில்லை.

கடந்த 2019 -ல் ஐந்து உடல்கள் சிதைந்து அழுகிய நிலையில் கிடைத்தன. இதன்பிறகு தற்போது மீண்டும் துவங்கிய மீட்பு பணிக் குழுவினருக்கு மேலும் நான்கு உடல்கள் செப்டம்பர் 29-ல் கிடைத்துள்ளன. 

இப்பணியை இந்திய ராணுவத்தின் டோக்ரா ஸ்கவுட் பிரிவுடன் இணைந்து திரங்கா மவுண்டன் ரெஸ்க்யு குழு மேற்கொண்டு வருகிறது. இக்குழுவினருக்கு சந்திரபகா எனும் பனி மலைப்பகுதியில் 1968 விமான விபத்தில் பலியான 4 உடல்கள் கிடைத்துள்ளன.

Related Posts