லெபனானில் சிக்கிய கனேடியர்களை மீட்கும் பணி தீவிரம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இஸ்ரேலிய படையினர் தொடர் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துள்ள நிலையில் லெபனானில் சிக்கிய கனேடியர்களை மீட்கும் பணியை அரசு தொடங்கி உள்ளது. 

லெபனானில் இருந்து கனடாவிற்கு கனடிய பிரஜைகளை அழைத்து வருவதற்காக சுமார் 800 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூடுதல் எண்ணிக்கையில் விமானங்களை பயன்படுத்தி கனடிய பிரஜைகளை அங்கிருந்து மீட்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 45 ஆயிரம் கனடியர்கள் லெபனானில் வசிக்க கூடும் என வெளி விவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.

இதுவரையில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு சுமார் 800 ஆசனங்கள் இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் கனடியர்களை அழைத்து வர முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Related Posts