நடிகை அனுஷ்கா கரம் கோர்க்க உள்ள துபாய் மாப்பிள்ளை! விரைவில் திருமணம்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அனுஷ்கா. அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.சினிமாவிற்கு வந்த ஆரம்பத்திலேயே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். அதில் வெற்றியும் அடைந்தார். தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களே நடிக்க விரும்பும் ஒரே நடிகை என்றால் அது அனுஷ்கா தான். அவரது ஜாதகத்தில் சில தோஷங்கள் இருப்பதால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த அனுஷ்கா சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து முக்கிய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்தவர் அந்த படத்திற்கு பின்னர் எவ்வளவு முயன்றும் உடல் எடையை குறைக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளானார். ஆயிர் வேத சிகிச்சை எல்லாம் மேற்கொண்டவருக்கு போதுமான ரிசல்ட் கிடைக்கவில்லை. அவ்வப்போது சினிமா விழாக்களில் தலை காட்டிக்கொண்டு இருந்தவர் விரைவில் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அனுஷ்கா பற்றி ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அது என்ன வென்றால், இப்போது 42 வயதாகும் அனுஷ்கா விரைவில் ஒரு துபாய் தொழில் அதிபரை திருமணம் செய்து கொள்ள உள்ளார் எனவும், அது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகிறது.

Related Posts