நடிகை வனிதா என்னதான் 90களில் இருந்தே நடிக்க வந்தவர் என்றாலும் இடையில் சினிமாவில் இருந்து முற்றிலும் காணாமல் போனார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சி முதல் சமையல் நிகழ்ச்சி வரை முக்கிய பிரபலமாக பார்க்கப்பட்டார். பின்னர் சீரியல்களில் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது இவரது மகளும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார். மகள் ஜோவிகாவும் பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் குக் வித் கோமாளி மணிமேகலை-பிரியங்கா பிரச்சனை குறித்து பேசியிருந்தார்.அதோடு சொந்த விஷயங்கள் பற்றி பேசி தாக்குபவர்களை செருப்பால் அல்ல எதைக்கொண்டு வேண்டுமானாலும் அடிப்பேன் என கோபமாக கூறியிருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. வனிதா இதுவரை 3 திருமணங்கள் செய்துள்ளார்,
ஆனால் அந்த 3 கல்யாணமும் பிரிவில் முடிந்துள்ளது. அதோடு நடன அமைப்பாளர் ராபர்ட் மாஸ்டரை கூட காதலித்து வந்தார், ஆனால் அவர்களது காதல் நீடிக்கவில்லை.
இந்த நிலையில் வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டரின் கையை பிடித்துக்கொண்டு கீழே உட்கார்ந்து காதலை வெளிப்படுத்தும் காட்சி போல ஒரு புகைப்படம் வெளியிட்டு, அக்டோபர் 5 என பதிவு செய்துள்ளார்.
உண்மை என்ன என்பதை அக்டோபர் 5 வரை காத்திருந்து பார்த்தால் தான் தெரியும். இவர்களே தங்களது சொந்த விஷயங்கள் பற்றி சோசியல் மீடியாவில் பதிவிடுவார்களாம் ஆனால் மக்களோ மீடியாவோ ரசிகர்களோ அது பற்றி பேசக்கூடாதாம். பேசினால் செருப்பால் அடிப்பேன் என கூறுவார்களாம். என்ன நியாயம்?