சென்னை உயர்நீதிமன்றம் ஈஷா யோகா மையத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து ஈஷா யோகா மையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் சத்குரு சமூகத்தில் மிகவும் மதிப்பு மிக்க நபர் என்றும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் போ*லியானவை என்றும், ஈசா யோகா மையத்தில் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான விசாரணை இன்று டெல்லி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதிகள், இதுபோன்ற அமைப்புகளில் காவல்துறையையோ அல்லது ராணுவத்தினரையோ விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது.
நீதித்துறை அதிகாரிகள் மட்டும்தான் அங்கு விசாரணை நடத்தலாம். எனவே ஈஷா யோகா மையத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த உத்தரவினை ரத்து செய்வதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதோடு ஈசா யோகா மையத்தில் உள்ள 2 பெண் துறவிகளுடன் காணொளி வாயிலாக நீதிபதிகள் விசாரணை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. காமராஜர் என்பவர் தன்னுடைய இரு மகள்களையும் ஈஷா யோகா மையத்தில் அடைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஈசா யோகா மையத்தில் காவல்துறையினர் சோதனை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.