Font size:
Print
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் நேற்று விலை மீண்டும் உயர்ந்தது.
இதைத்தொடர்ந்து இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 7110 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 7565 ரூபாய்க்கும், ஒரு சவரன் 60 ஆயிரத்து 520 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 101 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,01,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Related Posts