கத்தியே முகமூடி கொள்ளையர்களை விரட்டிய பஞ்சாபி பெண்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்த பெண் மந்தீப் கவுர். இவரது கணவர், தங்க நகை நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை, மந்தீப் கவுர் குழந்தைகளுடன் தனியாக இருந்த சமயத்தில், மூன்று முகமூடிகொள்ளையர்கள் அவரது வீட்டுக்குச் சென்றனர்.

கொள்ளையர்கள் வருவதை அறிந்த மந்தீப் கவுர், வேகமாக ஒடிச் சென்று கதவைத் தாழிடமுயன்றார். மறுபக்கம் கொள்ளையர்கள் கதவைத் தள்ளி வீட்டுக்குள் நுழைய முயன்றனர். எனினும்,தன்னுடைய முழு பலத்தையும் செலுத்தி மந்தீப் கவுர் கதவின் தாழ்பாளைப் பூட்டினார். பிறகு அருகில் இருந்த சோபாவை எடுத்து கதவோடு சேர்த்து வைத்தார். 

மேலும் அவர் கூச்சலிடத் தொடங்கிய நிலையில் கொள்ளையர்கள் அந்த வீட்டைவிட்டு ஓடினர். இந்தக் காட்சிகள் அனைத்தும் அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

வீடியோ இணைப்பு: https://twitter.com/i/status/1841479437944328234

Related Posts