பிக் பாஸ் 8ல் இன்று 8வது நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ நாமினேஷன் குறித்து வெளிவந்தது. இதில் ஆண்கள் அணி பெண்கள் அணியில் உள்ளவர்களையும், பெண்கள் அணி ஆண்கள் அணியில் உள்ளவர்களையும் தான் நாமினேட் செய்முடியும் என பிக் பாஸ் கூறியுள்ளார்.இதில் ரஞ்சித், சௌந்தர்யா சாச்சனா, ஜெஃப்ரி ஆகியோர் அதிக வாக்குகளை வாங்கியுள்ளனர். இந்த நிலையில், இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் அன்ஷிதாவிற்கும், ஆண்கள் அணியில் இருந்து சென்று பெண்கள் அணியில் விளையாடி வரும் முத்துக்குமரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. முத்து குமரனின் செயல் தனக்கு பிடிக்கவில்லை, உன் சாயம் வெளுத்துப்போச்சு என அன்ஷிகா பேசுகிறார்.ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த அன்ஷிதா, முத்துக்குமரனை பார்த்து உன்னிடம் பேச என விருப்பம் இல்லை, பேசாத போடா, பெரிய இதுன்னு நெனப்பு என கூறுகிறார்
இந்த காணொளிக்கு பலரும் அன்ஷிதாவை திட்டி கமெண்ட் செய்துள்ளனர். முன்னதாக ஏற்கனவே அன்ஷிதாவிற்கும் அருணவிற்கும் இடையே உள்ள உறவு அருணவின் கல்யாண வாழ்க்கையையே முறிந்துவிட்டது. சொல்லப்போனால் அருணவின் மனைவி மற்றும் மகள் அருணவை விட்டு பிரிந்து செல்ல முக்கிய காரணமே அன்ஷிதா என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. இப்போது இருவரும் பிக்பாஸ் உள்ளே வந்துள்ளார்கள் ஆனால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கிடையாது. மாறாக இருவரும் தங்களுக்குள் பெரிதாக எந்த பழக்கமும் இல்லை என்பது போலவே பழகி கொள்வது சோசியல் மீடியாவில் இருவருக்கும் வெறுப்புகளை சம்பாதித்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். இந்த நிலையில் அன்ஷிதா முத்துகுமாரனுடன் சண்டை போடுவது அன்ஷிதாவிற்கு ஹேட்டர்களை தான் உருவாகியுள்ளது.