விஜய் சேதுபதி தற்போது பிக் பாஸ் 8வது சீசனுக்கு புது தொகுப்பாளராக வந்திருக்கிறார். இவரது பேச்சு மிகவும் கடுமையாக நடந்து கொள்ளும் டீச்சர் போலவே உள்ளது என்பது தான் நெட்டிசன்களின் கருத்து. உள்ளே உள்ள போட்டியாளர்கள் நல்லவர்களோ கெட்டவர்களோ ஆனால் போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் போராடித்தான் மீடியாவிற்குள் நுழைந்துள்ளனர். அவர்களுக்கு என்று கொடுக்க வேண்டிய அடிப்படை மரியாதை கொடுத்து தானே வேண்டும்? அதை விடுத்து அவர்களிடம் சிடுசிடுவென விஜய் சேதுபதி எரிந்து விழுவது போலவே உள்ளது என்கிறார்கள் நெட்டிசன்கள். முக்கியமாக வயது வித்தியாசம் இல்லாமல் ஸ்டிரிக்ட் ஆபிசராக உள்ளார்.
ஷோ தொடங்கிய நாளில் விஜய் சேதுபதி போட்டியாளர்களை வரவேற்று உள்ளே அனுப்பினார். நடிகர் ரஞ்சித் போட்டியாளராக வரும்போது அவரை கவுண்டம்பாளையம் படத்தை பற்றி குறிப்பிட்டு விளாசினார்.
ரஞ்சித் பேசிய சில விஷயங்கள் தனக்கு அதிர்ச்சி ஆக இருந்ததாகவும் கூறினார்.போன வாரம் அப்படி பேசிய விஜய் சேதுபதி, அப்படியே இந்த வாரம் ரஞ்சித்தை புகழ்ந்து பேசிவிட்டார்.உங்க சட்டை நல்லா இருக்கு. உங்களுக்கு வயசே ஆக மாட்டேங்குது சார். உங்க மறுமலர்ச்சி படம் ரொம்ப பிடிக்கும் சார் என விஜய் சேதுபதி கூறியுள்ளார். விஜய் சேதுபதி கொஞ்சம் சிரித்த முகத்தோடு பேசலாமே? அந்த அளவிற்கு கடுகடுப்பு வேண்டாம் என்பது நெட்டிசன்கள் கருத்து.