ஐம்பது வயதை நெருங்க போகும் நடிகை, இன்னும் ஹீரோயினாக நடிக்கும் அழகின் ரகசியம் இதோ! மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை மஞ்சு வாரியர். இவர் நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்தார், இவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தார். ஆனால் சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். விவாகரத்து பெற்று தனியாக இருக்கும் மஞ்சு வாரியர் மலையாளத்தை தாண்டி தமிழில் கூட அதிக படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார்.
இவர் இளமையாக இருந்த காலத்தில் கொடுத்த ஹிட் படங்களை விட 49 வயதில் இப்போது கொடுக்கும் ஹிட் படங்கள் தான் வேற லெவலில் உள்ளன. குறிப்பாக அப்போது இருந்த ரசிகர்களை விட இப்போது தான் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். குறிப்பாக தமிழ் ரசிகர்கள். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் நடித்துள்ளார்.அதில் அவர் ஒரு பாடலுக்கு ஆடிய நடனம் இப்போதும் டிரெண்டிங்கில் உள்ளது. இவர் தற்போது அழகின் ரகசியத்தை கூறியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு,
1. ஆரோக்கியமான சருமத்திற்கு நீரோட்டம் அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்து நீரோற்றத்தை பராமரிக்க வேண்டும்.
2. காலை, இரவு 2 முறை முகத்தை க்ளென்சர் கொண்டு சுத்தப்படுத்துவது அவசியம்.
3. அடுத்து இயற்கை பேஸ் மாஸ்க் அப்ளை செய்வது மிகவும் அவசியம். பெரும்பாலும் தேன், தயிர், மஞ்சள், கற்றாழை ஜெல் நிறைந்த பேஸ் மாஸ்க் உபயோகிக்கிறார்.
இப்படி நிறைய இயற்கை விஷயங்களை முகம் பொலிவாக வைத்துக் கொள்ள கடைபிடிக்கிறாராம். முக்கியமான விஷயம் என்னவென்றால் இவர் சருமத்தை மட்டும் பராமரிக்க வில்லை, போதுமான உடற்பயிற்சி, யோகா மூலம் உடலையும் பராமரிக்கிறார். எல்லா பராமரிப்பு முறைகளும் இயற்கையானவைகளே தவிர செயற்கை சார்ந்தது அல்ல என்பது இன்னொரு முக்கியமான விஷயம்.