தொழில் தர்மம் பார்க்கிறாரா விஜய் சேதுபதி? கோடி ரூபாய் கொடுத்தாலும் பிக்பாஸில் இனி இது கிடையாது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி பிரமாண்டமாக துவங்கியது. இதுவரை 7 சீசன்களை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், திடீரென அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கமல் ஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி பிக் பாஸ் 8-ஐ தொகுத்து வழங்க களமிறங்கினார். போட்டியாளர்களை கையாளும் விதமும், நிகழ்ச்சியை கலகலப்பாக எடுத்து செல்லும் விதமும் விஜய் சேதுபதியிடம் மக்களுக்கு பிடித்துள்ளது.குறிப்பாக அவர் கமல் போல அல்லாமல் பட்டென போட்டியாளர்களின் முகத்தில் அடித்தது போல பேசுவது பலருக்கும் பிடித்தாலும், கமல் போல நிதானமாக கையாளும் பொறுமை அவரிடம் இல்லை, ஏதோ தலைமைஆசிரியர் மாணவர்களை விசாரிப்பது போலவே உள்ளது என்கிறார்கள் நெட்டிசன்கள். 

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மெயின் ஸ்பான்சர்ஸை மட்டும் தான் சொல்வேன் மற்ற அனைத்து ஸ்பான்சர்ஸ்களையும் சொல்ல மாட்டேன் என்று விஜய் சேதுபதி அடம்பிடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பான்சர்ஸ்களில் ரம்மி சர்க்கிலும் இருப்பதால் தான், அவர் அதை சொல்ல மறுக்கிறார் என்று இதனை காரணமாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். ஆனால் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய போது இந்த ரம்மி விளம்பர ஸ்பான்சரை கூறியதாக சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.விஜய் சேதுபதி தான் செய்யும் செயல்களில் நல்லது கெட்டது ஆராய்ந்து தான் செய்வார் என்பதும் மிகவும் நுட்பமான மனிதர் என்பதும் அவரது நட்பு வட்டாரங்கள் மூலம் அறியப்பட்ட செய்தி.

Related Posts