காதல் உண்மை தான் ஆனால் காதலர் இவர் இல்லையாம்! திருமணம் எப்போது?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை சுனைனா. இவர் நகுல் நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து இவர் மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, கவலை வேண்டாம், தொண்டன் லத்தி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். என்னதான் தமிழில் பல படங்கள் நடித்தாலும் கூட இவருக்கு பெயர் சொல்லும் அளவு எந்த படமும் அமையவில்லை. இருப்பினும் அயராது தமிழ், தெலுங்கு,மலையாளத்தில் பிசியாக கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி வருகிறார். 

சமீபத்தில் இவர் லாக் என்று குறிப்பிட்டு ஒரு நபரின் கையை பிடித்தபடி புகைப்படம் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது, அது பிரபல யூடியூபர் காலித் அல் அமேரி என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. சுனைனா நடித்த ராக்கெட் டிரைவர் படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகா உள்ள நிலையில், அந்த படம் குறித்து பேட்டிகளில் பேசி வருகிறார். இவரை பேட்டி எடுத்த தொகுப்பாளினி உங்கள் காதலர் மற்றும் காதல் வாழ்க்கை குறித்து கூறுமாறு கேட்டார். அதற்கு உஷாராக நான் சினிமாவை மட்டும் தான் காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார். பிறகு என்ன காரணத்திற்காக சோசியல் மீடியாவில் லாக் என்று குறிப்பிட்டு ஒரு நபரின் கையை பிடித்தபடி புகைப்படம் வெளியிட்டு இருந்தார் என்ற விளக்கம் கொடுக்கவில்லை.

 பிரபலங்கள் தங்களது தனிபட்ட வாழ்க்கை பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று நினைத்தால் முழுமையாக அதை ப்ரைவசியாக வைத்திருக்க வேண்டும். அதைவிடுத்து சோசியல் மீடியாவில் தங்களது சொந்த விஷயம் பற்றி சிறு துணுக்குகளை போட்டுவிட்டு பின்னர் அது குறித்து கேள்வி எழுப்பும் ரசிகர்களிடமோ அல்லது பேட்டி எடுக்கும் தொகுப்பாளர்களிடமோ கோவம் கொள்வதை பார்க்க முடிகிறது. அப்படி சொல்லக்கூடாது என்றால் எதற்காக சோசியல் மீடியா பக்கம் வந்து ஊருக்கு சொல்ல வேண்டும் என்பது ரசிகர்களின் கேள்வி.

Related Posts