ஹன்சிகா இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது காதலரை கரம்பிடித்தார். சோஹைல் கத்துரியா என்பவரை தான் அவர் கரம்பிடித்தார்.இவர் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியின் கணவர் என்றும் அவர்களுக்கு இடையே விவாகரத்து ஆன பின்னர் ஹன்ஷிகா இவரை கரம்பிடித்தார் என்ற செய்தியும் உண்டு. குறிப்பாக தோழியின் திருமணத்தில் ஹன்சிகா நடனம் ஆடினார் என்றும் சொல்லப்படுகிறது. இப்படி பல விதமாக விமர்சித்தாலும் ஹன்சிகா அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.
திருமணத்திற்கு பிறகும் ஹன்சிகா பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.
இருப்பினும் இவருக்கு திருமணத்திற்கு பிறகு இவர் நடித்த எந்த படமும் பிரமாதமாக இல்லை, குறிப்பாக இவர் முன்னர் இருந்த உடல்வாகை குறைத்து ஒல்லியாக மாறியது இவரது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பதை சோசியல் மீடியாவில் பார்க்க முடிகிறது. அதனாலே படமும் இவருக்கு சரியாக அமைவதில்லை என்கிறார்கள் சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் ஹன்சிகா தனது கணவருடன் புது வீட்டுக்கு சென்று இருக்கிறார். அதன் கிரஹப்பிரவேச புகைப்படங்களை அவர்வெளியிட்டு இருக்கிறார்.