காசாவை குறிவைத்து இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வடக்கு காசா மீது இஸ்ரேல் இன்று நடத்திய புதிய வான்வழித் தாக்குதலில் 87க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் டெய்ர் அல் பலாஹ் முகாமில் இருந்த 40 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட Beit Lahiya  என்ற இடம் கடந்த ஒராண்டாக இஸ்ரேலின் தரைப்படையினரால் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் ஆள் நடமாட்டம் இருக்கும் வேலையில் திட்டமிட்டு இந்த தாக்குதல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிய இராணுவம் இதுவரை எந்த கருத்தையும் கூறவில்லை.

ஏற்கெனவே வடக்கு காசாவில் உள்ள நகரமான ஜபாலியா அகதிகள் முகாமில் கடந்த இரண்டு வாரங்களாக இஸ்ரேல் ஒரு பெரிய தாக்குதலை நடத்தி வந்தது. அதற்கு காரணம் பாலஸ்தீனம் மீண்டும் தனது ஆதரவு ஹமாஸ் ஆயுதக் குழுக்களை அங்கு களமிறக்கி உள்ளதாக இஸ்ரேல் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்ததுதான். இந்நிலையில் இஸ்ரேல் ஏற்கனவே வடக்கு காசாவை அதிகளவில் பாதிப்படைய செய்தது. அதனால் இந்த தாக்குதலும் காசாவின் நிலையை மேலும் நெருக்கடியில் தள்ளி உள்ளது.

Related Posts