இந்திய போர் விமான தயாரிப்பில் டாடா நிறுவனம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ராணுவத்துக்கான C-295 விமானங்களை தயாரிப்பதற்கான டாடா நிறுவனத்தின் ஆலை குஜராத்தின் வதோதரா நகரில் திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் ஆகியோர் இணைந்து இந்நிறுனத்தை திறந்து வைத்தனர்.

ராணுவ வீரர்கள் மற்றம் தளவாடங்களைக் கொண்டு செல்ல, மருத்துவ மீட்புப் பணிகளில் ஈடுபட, விமானத்தில் இருந்து குண்டுகளை வீச, விஐபி பயணத்துக்குப் பயன்படுத்த என பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட C-295 விமானங்களை முழுவதுமாக உள்நாட்டில் தயாரிப்பதற்கான முதல் தொழிற்சாலை நிறுவனமான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) குஜராத்தின் வதோதராவில் திறந்து வைக்கப்பட்டது. 

ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த தொழிற்சாலை தனது உற்பத்தியை உள்நாட்டில் தொடங்க உள்ளது. 

நாட்டின் சிறந்த மகனாக விளங்கிய ரத்தன் டாடாவை சமீபத்தில் இழந்தோம். இன்று அவர் நம்மிடையே இருந்திருந்தால், மகிவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார். அவரது ஆன்மா எங்கிருந்தாலும், அவருக்கு மகிழ்ச்சியைத் தரும் என இந்திய பிரதமர் மோடி பேசினார். 

பாராளுமன்ற வேட்பாளரின் ஆதரவாளரது  கடை அடித்து நொறுக்கல் | Thedipaar News

Related Posts