Font size:
Print
மும்பை பாந்த்ரா ரயில்முனையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் காயம் அடைந்துள்ளனர். ரயில் நிலையத்தின் நடைமேடை 1-ல் காலை 5.56 மணிக்கு பாந்த்ரா - கோராக்பூர் விரைவு வண்டி வந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக பாபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக பிர்ஹான்மும்பை மாநகராட்சிதெரிவித்துள்ளது. காயம் அடைந்தவர்களில் ஏழு பேரின் உடல்நிலை சீராக இருக்கிறது. இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
எமது குழுவில் கள்வர்கள் இல்லை! ; ரவி குமுதேஷ் | Thedipaar News
Related Posts