Font size:
Print
ஹைதராபாத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஸ்விகிக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.அதில் ஸ்விகி மெம்பர்ஷிப்பை நான் வாங்கியுள்ளேன். இதன் மூலம் குறிப்பிட்ட தூரத்திற்குள் உணவு இலவசமாக டெலிவரி செய்யப்படும். ஆனால் நவம்பர் 1 அன்று ஸ்விகியில் உணவு ஆர்டர் செய்தேன். இந்நிலையில் வீட்டிற்கும் உணவகத்திற்கும் இடையிலான தூரம் 9.7 கிலோமீட்டர் ஆகும்.
ஆனால் 9.7 கிலோமீட்டராக இருந்த டெலிவரி தூரத்தை வேணும் என்றே 14 கிலோமீட்டர் அதிகரித்து என்னிடமிருந்து அதற்காக ரூ 113 வசூல் செய்தார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுரேஷ் பாபுவிற்கு ஸ்விகி நிறுவனம் இழப்பீடாக ரூ 35,453 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
Related Posts