தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் சமந்தா. முதலில் மாடலிங் துறையில் நுழைந்து ரூ. 500 சம்பளம் வாங்கியவர் அப்படியே நாயகியாக நடிக்க தொடங்கி இப்போது அசுர வளர்ச்சி கண்டு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். என்னதான் சொந்த வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் விடாமுயற்சி உடன் ஓடிக்கொண்டே இருக்கிறார். கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி கொண்டு ஒரு நிமிடம் கூட நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார். உடல் நல குறைவால் சற்று நடிப்பில் இருந்து விலகி இருந்த சமந்தா மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார்.
தற்போது, சமந்தா Citadel: Honey Bunny என்ற வெப் தொடர் ஒன்றில் பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படம் பெரும் வெற்றியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இவர் நடிப்பில் வெளியான சாகுந்தலம், குஷி, யசோதா ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்த பின்னடைவு குறித்து சமந்தா பகிர்ந்துள்ளார். நான் கடந்த காலத்தில் சில தவறுகளை செய்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். சில விஷயங்கள் எனக்கு சரியாக அமையவில்லை, தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இவர் சினிமா படங்களை மனதில் வைத்துக்கொண்டு சொன்னாரா இல்லை சொந்த வாழ்க்கையை மனதில் வைத்து கொண்டு சொன்னாரா என தெரியவில்லை. ஆனால் சினிமாவில் ஆகட்டும் இல்லை சொந்த வாழ்க்கையில் ஆகட்டும் என்ன தோல்வி வந்தாலும், நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையெனில் காலம் நம்மேல் ஏறி ஓடிவிடும் என்பதற்கு உதாரணமாக உள்ளார் சமந்தா. அதனாலே இன்னும் அவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.