பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோயில் மீது காலிஸ்தான் தீவிரவாத குழுவினர் தாக்குதல் நடத்தினர். கோயிலில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கனடாவில் தூதரக முகாமுக்கு இந்திய அதிகாரிகளின் வருகையைக் கண்டித்து இந்தப் போராட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஈடுபட்டதாகத் தெரியவந்தது.
இந்தத் தாக்குதலின்போது அப்பகுதி வன்முறைக் களமாக மாறியது. அங்கிருந்த இந்து மக்களை விரட்டியடித்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவியது.
இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கனடாவில் இந்து கோயில் மீதும், இந்துக்கள் மீதும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தசம்பவத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில், கனடாவில் நடக்கும் செயல்களுக்கு இந்தியத்தூதரக அதிகாரிகளை மிரட்டும் போக்கில் நடந்து கொள்ளும் கோழைத்தனமான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிர்வாகத்தையும் நான் கண்டிக்கிறேன்.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. இந்த விவகாரத்தில் கனடா நாட்டுஅரசு, நீதியை உறுதிப்படுத்தி சட்டத்தின் கடமையை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறோம் என மோடி தெரிவித்துள்ளார்.