அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? ஓட்டுப்பதிவு துவங்கியது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உலக நாடுகள் மிகவும் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது. முதல் மாநிலமாக நியூ ஹாம்ப்ஷயரில் அந்நாட்டு நேரப்படி காலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி நடந்து வருகிறது. 

இந்த தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸ், குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் ஏற்கனவே 8.2 கோடி பேர் தங்களது ஓட்டினை பதிவு செய்துவிட்டனர்.

வன்முறை ஏதும் நடக்கக்கூடாது என்பதற்காக சில இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Related Posts