முதல்வருக்காக வாங்கிய சமோசாக்கள் மாயம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவில் இமாச்சல பிரதேச முதல்வருக்காக வாங்கி வரப்பட்ட சமோசாக்கள் மாயமானது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு கடந்த மாதம் 21-ம் தேதி சிம்லாவில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தார். 

அப்போது முதல்வர், அரசு அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக சமோசாக்கள் வாங்கி வருமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அப்போது முதல்வருக்கு என வாங்கி வரப்பட்ட 3 பெட்டிகளில் அடங்கிய சமோசாக்கள் முதல்வருக்கு வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

முதல்வர் சுக்விந்தர் சிங்குக்கு சமோசாக்கள் வாங்கி வருமாறு சப்-இன்ஸ்பெக்டருக்கு போலீஸ் ஐஜி உத்தரவிட்டிருந்தார். லக்கர் பஜாரில் உள்ள ஓட்டல் ரேடிசன் புளூவிலிருந்து 3 பாக்கெட்களில் சமோசா கொண்டு வரப்பட்டது. இந்த சமோசாக்களை உதவி சப்-இன்ஸ்பெக்டர் வாங்கி வந்தார்.

இந்த சமோசாக்கள், முதல்வருக்காக மட்டுமே என்று சப்-இன்ஸ்பெக்டருக்கு மட்டுமே தெரியும். ஆனால், சமோசா வாங்கி வந்த ஏஎஸ்ஐ, அவற்றை சிற்றுண்டிகளை உயர் அதிகாரிகளுக்கு விநியோகம் செய்யும் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் (எம்டி) பிரிவு ஊழியர்களிடம் ஒப்படைத்துள்ளார். 

இவ்வாறு இந்த சமோசா பெட்டிகள் கைமாறி, மாறிச் சென்று முதல்வருக்கு வழங்கப்படாமல் போய்விட்டது. கடைசியாக இந்த சமோசாக்கள், அங்கு காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விவரம் தெரியவந்துள்ளது.

Related Posts