இந்தியாவில் அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அசாம் மாநிலத்தில் உணவகங்கள், பொது நிகழ்ச்சிகள், பொது இடங்களில் மாட்டிறைச்சி சாப்பிட தடை விதிக்கப்படுவதாக முதல்வர் ஹிமாந்த பிஸ்வா ஷர்மா தெரிவித்துள்ளார்.

கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள 5 கி.மீ சுற்றளவில் மாட்டிறைச்சிக்கு முன்பு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கட்டுப்பாட்டை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். 

இந்த கட்டுப்பாடு மாநிலம் முழுவதும் உள்ள உணவக விடுதிகள்,உணவகம் மற்றும் உள்ளூர் கொண்டாட்ட நிகழ்சி உட்பட அனைத்திற்க்கும் பொருந்தும். விதிகளை மீறுபவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு தண்டிக்கப்படுவர் என கூறியுள்ளார். 

மொட்டுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் கைது! | Thedipaar News

Related Posts