தமிழ் சினிமாவில் 80களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கவுதமி. ரஜினி, கமல், சத்யராஜ் போன்ற பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து வந்தவர். தென்னிந்திய சினிமாவில் நீங்கா கதாநாயகியாக வலம்வந்தார். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ள இவர் மார்பக புற்றுநோ*யால் பாதிக்கப்பட்டு பல போராட்டத்திற்கு பின் அதில் இருந்து மீண்டார்.அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை கௌதமி, புற்றுநோ*யால் தான் சந்தித்த வலிகள் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், புற்றுநோ*ய் காலத்தில் அந்த வாழ்க்கை மிகவும் மோசமானதாகவே இருந்தாலும் என் மகளுக்காக நான் அனைத்தையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.அந்த நேரத்தில் எனக்கு ஓடிக் கொண்டிருந்த ஒரு விஷயம் எனது மகள் மட்டும் தான். நான் இல்லை என்றால் என் மகளுக்கு வேறு யாரும் இருக்கப்போவதில்லை என்பது எனக்கு தெரிந்ததால் நான் கே*ன்சரை எதிர்த்து போராடினேன்.
அப்போது ஒவ்வொரு விஷயத்தையும் என்னுடைய மகளுக்கு நான் சொல்லி சொல்லி தான் வளர்த்தேன். நான் இதில் இருந்து மீண்டு வரலாம், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் அவருக்கு சொல்லிக் கொண்டே தான் இருந்தேன்.அப்போது எனது மகள் அனுபவித்த வ*லி சொல்ல முடியாதவை, சிறுவயதில் இருந்து என் மகள் சந்தித்த பி*ரச்சனைகளால் அவள் என்னை விட தைரியசாலியாகவே இருக்கிறாள் என கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி வைரலாகி வருகிறது. காரணம் ஒரு நடிகை பெருநோ*யோடுபோராடி மீண்டு வந்துள்ளார் என்றால் அது பல கே*ன்சர் நோ*யாளிகளுக்கு பாடமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நோ*யாளிகளுக்கு மட்டும் இல்லை, வாழ்க்கையில் இல்லை இல்லை என சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் நடிகை கவுதமியின் கதையை கேட்கும் போது, நமக்கு எதுவும் இல்லை தான் கூடவே நோ*யும் இல்லை என பெருமிதம் பட்டுக்கொள்ளவேண்டும்.