தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் என்ற அடையாளத்துடன் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் சில படங்களை இயக்கி உள்ளார் அதில் சிலது வெற்றி பெற்றுள்ளது. இவர் நடிகர் தனுஷை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் வாழ்க்கை குறித்து கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியது, வாழ்க்கையின் தத்துவத்தை கடந்த மூன்று ஆண்டுகளின் நான் கற்றுக் கொண்டேன். தனிமை எனக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருக்கிறது, அந்த தனிமையை நான் விரும்புகிறேன். நான் புரிந்துகொண்ட மற்றொரு விஷயம் என்னவென்றால் தனிமையில் இருக்கும் ஒருவர் தான் வாழ்க்கையில் மிகவும் பாதுகாப்பான நபராக இருக்கிறார் என கூறியுள்ளார்.
\இவர் முன்னதாக தனுஷுடன் திருமண வாழ்வில் இருக்கும்போது, தன்னுடைய ஜிம் புகைப்படங்களையோ அல்லது தான் சந்திக்கும் நபர்களது புகைப்படங்களையோ அதிகமாக பகிர்ந்து கொள்ள மாட்டார். ஆனால் இப்போது தான் தனுஷை பிரிந்து வாழும் நிலையில் தான் தொடர்பான புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் தனுஷ் பார்க்கவேண்டும் என்பதற்காகவே இப்படி செய்கிறீர்களா என வினாவுவது உண்டு. இப்போது இவர் தனிமை பற்றி கொடுத்துள்ள பேட்டி கூட தனுஷ் பார்க்க வேண்டும் என்பதற்காகவா? என இவரது ரசிகர்கள் விளையாட்டாக கேள்வி எழுப்பியுள்ளனர்.