அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் சுகவீனமுற்ற நிலையில் சுயநினைவற்று கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தனிப்பட்ட விஜயமாக கொழும்புக்குச் சென்றிருந்தார். இந்நிலையில், வழக்கமான உடல் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது வைத்தியசாலையை அண்மித்த நிலையில் திடீரென அவரின் உடல் நிலை பாதிப்புக்கு உள்ளாகி சுயநினைவற்று மயங்கி வீழ்ந்தார்.

இதையடுத்து அவர் உடனடியாகக் கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

சுயநினைவற்ற நிலையில் அவருக்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கைச் சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. (P)


Related Posts