போதையில் கான்ஸ்டபிள் ; சார்ஜென்ட்டின் உதட்டில் காயம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி பாடசாலையில் நடைபெற்று வரும்  உயர்தர பரீட்சைகளுக்கான  கடமைகளுக்கு  நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மதுபோதையில் வந்து பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரை தாக்கிய சம்பவம்  திங்கட்கிழமை (09) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் அம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள்  கைது செய்யப்பட்டுள்ளதுடன் தாக்குதலுக்குள்ளான  பொலிஸ் சார்ஜன்ட் , மேல் உதடு காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (P)


Related Posts