இமயமலையில் உருவான பிரம்மபுத்திரா ஆறு அருணாச்சலபிரதேசம், அசாம், வங்காளதேசம் வழியாக கடலில் கலக்கிறது.
இதனிடையே, அசாமின் தலைநகர் கவுகாத்தி மற்றும் வடக்கு கவுகாத்திக்கு குறுக்கே பிரம்மபுத்திரா ஆறு பாய்கிறது. இதையடுத்து, இரு பகுதியையும் விரைவில் இணைக்கும் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே ரூ. 3 ஆயிரத்து 30 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தில் 6 வழிச்சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட மேம்பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த மேம்பாலத்தின் மூலம் கவுகாத்தி, வடக்கு கவுகாத்தி இடையேயான பயண தூரம் 60 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களாக குறைய உள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தி சென்ற பிரதமர் மோடி இன்று காலை மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அசாம் கவர்னர் லட்சுமன் பிரசாத், முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Font size:
Print
Related Posts
