ஸ்கார்பரோ-ரூஜ் பார்க் தொகுதியில் மும்முனைப் போட்டிக்கு வாய்ப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

டொராண்டோ நகர பாடசாலை வாரிய அறங்காவலரும், தற்போதைய தலைவருமான நீதன் சான், ஸ்கார்பரோ-ரூஜ் பார்க் (Scarborough-Rouge Park) தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை திங்கட்கிழமை (ஜூன் 23) தாக்கல் செய்தார். வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முதல் நாளான அன்றே அவர் தனது குடும்பத்தினருடன் சென்று இந்த மனுவைச் சமர்ப்பித்தார். முன்னாள் நகரசபை உறுப்பினரான நீதன் சான், இந்த இடைத்தேர்தலில் களமிறங்குவதன் மூலம், தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இத்தொகுதியின் நகரசபை உறுப்பினராக இருந்த ஜெனிபர் மெக்கெல்வி (Jennifer McKelvie), கடந்த பொதுத் தேர்தலில் அஜாக்ஸ் தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து, ஸ்கார்பரோ-ரூஜ் பார்க் தொகுதி வெற்றிடமானது. இதனைத் தொடர்ந்தே இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நீதன் சான் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த இடைத்தேர்தலில் மேலும் இரண்டு தமிழர்களும் போட்டியிடும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். டொராண்டோ நகர பாடசாலை வாரிய அறங்காவலரான அனு ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் வீடு விற்பனை முகவர் சியான் சின்னராஜா ஆகியோர் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், ஸ்கார்பரோ-ரூஜ் பார்க் தொகுதி இடைத்தேர்தல் தமிழர்கள் மத்தியில் ஒரு மும்முனைப் போட்டிக்கான களமாக மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Posts