உலகமே உற்றுநோக்கும் பேச்சுவார்த்தை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஈரானுடன் மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) பாகிஸ்தானுக்குப் பயணமாகியுள்ளார்.

நாளை (11) இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அவர் விடுத்துள்ள செய்தியில், ஈரான் நல்லெண்ணத்துடன்செயற்படுமானால், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் செல்லும் கப்பல்களுக்குப் போக்குவரத்து கட்டணத்தை அறவிடும் ஈரானின் தீர்மானம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் அதிக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
சர்வதேச எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலைத் தணிக்கும் நோக்கில் இந்தப் பயணம் அமைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Posts