விஜய் டிவியின் லொள்ளு சபா ஷோவில் காமெடியனாக நடித்து பிரபலமாகி இருந்த உதயா என்ற நடிகர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு இருந்தார். இவரை 90ஸ் கிட்ஸ்களுக்கு தெரியாமல் இருக்காது. படங்களில் கூட நடித்துள்ளார். இருப்பினும் பெயர் சொல்லும் அளவிற்கு பெரிய காமெடியனாக வளரவில்லை. இதே ஷோவில் நடித்த சந்தானம் எங்கேயோ போய்விட்டார். இந்த நிலையில் லொள்ளு சபா ஷோவில் காமெடியனாக நடித்து பிரபலமாகி இருந்த உதயா அவரது கால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மருத்துவர்கள் அதை அகற்றி இருக்கிறார்கள். நடிகர் உதயாவை நேரில் சந்தித்து பல நடிகர்கள் தற்போது உதவி செய்து வருகின்றனர். காமெடி நடிகர் TSK தற்போது மருத்துவமனைக்கே சென்று உதயாவுக்கு பண உதவி செய்து இருக்கிறார். லொள்ளுசபா,கனா காணும் காலங்கள் மற்றும் பல திரைப்படங்களில் நடித்த அண்ணன் உதயா அவர்களுக்கு ஓமந்தூரார் மருத்துவனையில் சர்க்கரை வியாதியால் ஒரு கால் அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, மேல்சிகிச்சை எடுத்து வருகிறார் இன்று அவரை நான் சந்தித்து என்னால் முடிந்த பண உதவியை செய்து வந்துள்ளேன் என அவர் பதிவிட்டு இருக்கிறார். இவரது இந்த பதிவை பார்த்து பலரும் இவருக்கு உதவி செய்து வருகிறார்கள்.