Font size: 15px12px
Print
ராமேசுவரம் அடுத்து பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் கடந்த 6ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 14 மீனவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது.இதனையடுத்து இலங்கை நீதிமன்றம் இன்று 14 மீனவர்களுக்கு தலா ரூ. 4.50 லட்சம் பணத்தை அபராதமாக விதித்துள்ளது. இந்த அபராதத்தை கட்டினால் விடுதலை, தவறினால் ஓராண்டுக்கு சிறை தண்டனை என நீதிபதி உத்தரவு பிரப்பித்தார். இந்த சம்பவத்தால் பாம்பன் மீனவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
Related Posts