Font size:
Print
கொழும்பின் பல பகுதிகளில் இன்று 16 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த நீர் விநியோகத் தடையானது இன்று மாலை ஐந்து மணி முதல் நாளை (14) முற்பகல் 9 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
Related Posts