மட்டக்களப்பில் தொடரும் கன மழை : வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள் !

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கன மழை காரணமாக மட்டக்களப்பின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரில் முழ்கியுள்ளன.

அந்தவகையில் கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 123.3மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வெள்ளப் பாதிப்புக் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதான குளங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் நீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் மழைபெய்யும் நிலைமை காணப்படுவதனால் தாழ்நில பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Posts