கொழும்பில் சுற்றி திரிந்த மர்ம பெண் : பொலிஸ் விசாரணையில் வெளிவந்த தகவல் !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கந்தானை நகரில் கடந்த சில நாட்களாக, மரியாள் போன்று உடையணிந்து சுற்றித் திரிந்த காட்சிகள் அடங்கிய பல காணொளிகள் சமூகத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

குறித்த பெண் யார் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகியுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக கந்தானை நகரில் வெண்ணிற ஆடை அணிந்து உலா வந்த இவர் தொடர்பில் சமூகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அவர் ஒரு வெளிநாட்டுப் பெண் என்று சந்தேகிக்கப்படலாம் என்றும், மரியாளின் சாயலைச் சித்தரிப்பதாகவும் சிலர் கூறினர்.

அதற்கமைய, அவர் யார் என்பதனை அறிய மக்கள் சமூக வலைத்தளங்களில் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இதனடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸாரிடம் வினவிய போது அவர் ரஷ்ய பெண் என, விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் இந்த நாட்டிற்கு வந்து பௌத்த தியான முறைகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

அவர் கத்தோலிக்க பெண்ணாக இருந்தாலும் பௌத்த தத்துவத்தை பயின்று வருவதாகவும், இதனிடையே கந்தானை பிரதேசத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு சென்ற போது எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (P)


Related Posts