இறைவனின் உதவியாலும், சக்தியாலும், பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் ஒளிமயமான எதிர்காலம் என்பது அமெரிக்கா இல்லாத ஒரு எதிர்காலமாக, மக்களின் முன்னேற்றம், வசதி மற்றும் சேவை செய்யும் ஒன்றாக அமையும் என ஈரான் ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கையில் கமேனி கூறியுள்ளதாவது: ஈரானின் தேசிய நலன்களுக்காக அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திறன்களை தொடர்ந்து பாதுகாப்போம். நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள 9 கோடி கண்ணியம் வாய்ந்த ஈரானியர்கள், உயிரி தொழில்நுட்பம் முதல் அணுசக்தி மற்றும் ஏவுகணை திறன் வரை ஈரானின் அடையாளமாக பார்க்கின்றனர். ஆன்மிகம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப திறன்கள் அனைத்தையும் தேசிய சொத்துகளாக கருதுகின்றனர். அவர்கள்நாட்டின் நீர்நிலைகள், நிலம் மற்றும் வான்வெளியை பாதுகாப்பதை போலவே இவற்றையும் பாதுகாப்பார்கள்.
பாரசீக வளைகுடா மற்றும் ஒமன் வளைகுடாவின் கடற்பரப்பில் உள்ள நமக்கும்நமது அண்டை நாடுகளுக்கும் ஒரு பொதுவான தலைவிதி உள்ளது. ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வந்து பேராசையுடனும் வன்மத்துடனும் செயல்படும் வெளிநாட்டினருக்கு அதன் நீரின் ஆழத்தை தவிர வேறு எங்கும் இடமில்லை.ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டுவிட்டது.
அமெரிக்காவும்,இஸ்ரேலும், பிராந்தியத்தின் அராஜகவாதிகள். அமெரிக்கா தனது திட்டங்களில் அவமானகரமான தோல்வியை சந்திக்கவும், பாரசீகவளைகுடா மற்றும் ஹார்முஸ்ஜலசந்திக்கு இப்போது ஒரு புதிய அத்தியாயம் அரங்கேறி வருகிறது. இவ்வாறு மொஜ்தபா கமேனி கூறியுள்ளார்.
Font size:
Print
Related Posts
