பிராம்டனில் காணாமல் போன தமிழரை தேடும் பணி தீவிரம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிராம்டனில் காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 64 வயதான யோகராஜா கடந்த ஜூலை 31ல் காணாமல் போனார். 

பீல் பிராந்திய காவல்துறையினர் பொது மக்கள் உதவியை நாடி இருந்தனர். ஒரு வாரங்களாக கண்டுபிடிக்கப்படாத நிலையில், இவரை தேடும் முயற்சியில் யோர்க் பிராந்திய காவல்துறையினர் உதவி வருகின்றனர்.

காணாமல் போன நாளில் Ontario மாகாண CFAZ 745 என்ற பதிவெண் கொண்ட 2019 Grey Honda Odyssey வாகனத்தில் இவர் பயணித்தாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த வாகனம் இறுதியாக King City அருகே காணப்பட்டதாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர். இவரை கண்டவர்கள் காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.

GOAT படத்தின் கதை | Thedipaar News

Related Posts