Font size: 15px12px
Print
நாட்டில் இன்று (07) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரமொன்றை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட 70 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கி இந்த டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வேலைத்திட்டம் குறித்து இன்று மக்களுக்கு அறிவிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டிற்கான குறித்த நியமனம், இலங்கை மருத்துவ சங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
Related Posts