கொழும்பு – கிரான்பாஸ் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

கொழும்பு – கிரான்பாஸ் – பாலத்துறை (தொட்டலங்க) பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 பேலியகொடயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து சைக்கிள் ஒன்றுடன் மோதுண்டுள்ளது.

 இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 இந்த விபத்தில் கிரான்பாஸ் பகுதியைச் சேர்ந்த 59 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிரான்பாஸ் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். (P)

வடமராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட மதில்கள் அகற்றல் | Thedipaar News

Related Posts