வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம், ஒரு நாட்டையே நிலைகுலையச் செய்தது. இந்தப் போராட்டம் மிகப் பெரிய வன்முறையாக வெடித்தது. அதன்பின்னர் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டமும் வன்முறையாக வெடித்து, அரசையே கலங்கடித்தது. பின்னர், ஷேக் ஹசீனா திங்கள்கிழமை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவின் தஞ்சம் அடைந்தார். அதன்பின்பும் வன்முறை கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து, ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் கட்சி தலைவர்களின் சொத்துகள் தீ வைத்து நாசமாக்கப்பட்டன.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம் திங்களன்று கவிழ்ந்ததில் இருந்து நீடித்த வன்முறைகளில் 232 பேர் பலியாலியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்நாட்டில் இதுவரையிலான உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 560 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனமும் யாழ்ப்பாண வணிகர் கழகமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்