Font size: 15px12px
Print
வெற்றிடமாக இருக்கும் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரால் வெற்றிடமான ஆசனங்களுக்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை நியமிப்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
சில நிமிடங்களுக்கு முன்னர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படும்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள போதும் ஏனைய கட்சிகளுக்கு முன்னுதாரணமாக அமையும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் இந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. (P)
இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு | Thedipaar NewsRelated Posts