கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகர் வினித் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் என நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கினார். என்னதான் தமிழில் குறைவான படமே நடித்தாலும் கூட யாருப்பா இந்த நடிகர் இப்படி கண்ணாலே கதாபாத்திரத்தை கொண்டு வந்து விடுகிறார் என்றவாறு தான் இவரது நடிப்பு இருக்கும். ஆவாரம் பூ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த நடிகர் வினீத் தனது முதல் படத்திலேயே அனைவரின் மனதையும் வென்றார்.இதனால் தமிழ்நாட்டின் திரைப்பட நடிகர் சங்கத்தின் சிறந்த புதுமுகம் விருது இவருக்கு வழங்கப்பட்டது. நடிகர் வினீத் ஒரு சிறந்த நாயகனாக மட்டுமில்லாமல் பரதநாட்டிய கலைஞராக பல பரதநாட்டிய கச்சேரிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர், பரதநாட்டிய கலைஞர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடன இயக்குனர் என பன்முக திறமையை வெளிக்காட்டியுள்ளார். இவர் சந்திரமுகி படத்தில் ஜோதிகாவுடன் ஆடும் ராரா பாடலிலே பார்த்திருப்பீர்கள் இவரது திறமையை! அந்த கதாபாத்திரத்தில் இவரை தவிர வேறு யாரு நடித்திருந்தாலும் கண்டிப்பாக சுமாராக தான் இருந்திருக்கும்.
2004ம் ஆண்டு ப்ரிசில்லா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டவருக்கு ஒரு மகளும் உள்ளார். தற்போது நடிகர் வினீத் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ஜப்பானில் சூறாவளியால் ரெயில், விமான சேவை பாதிப்பு | Thedipaar News